மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (09.09.2024) மதுரை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கிவைத்ததை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் 563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.25 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்), திரு.ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), திரு.கே.எஸ். சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன் மற்றும் தேனி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு...
No comments:
Post a Comment