கடமலைக்குண்டுவில் ஏ. ஏ. விளையாட்டு பயிற்சி கூடம் திறப்பு விழா .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மற்றும் சுற்றியுள்ள கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏ.ஏ. விளையாட்டு பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சி கூடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் செயலாளர் துரைமுருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் .தேனி மாவட்ட அமைச்சர் கிக் பாக்சிங் மாவட்ட தலைவர் மகாராஜன் வாழ்த்தி பேசினார். பயிற்சி கூடத்தின் உரிமையாளர் பொன்னிஸ்வரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கிராம பெரியவர்கள் மற்றும் ஏராளமான பயிற்சி கூட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி கூடத்தில் கிக் பாக்சிங், சதுரங்கம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்படும் என்று பயிற்சி கூடத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment