ஆண்டிபட்டியில் அதிமுக வின் 53 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.
தமிழகம் முழுவதும் அதிமுக ஆரம்பித்து 52 ஆண்டுகள் நிறைவடைந்து, 53வது ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் ஆண்டிபட்டியில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன் தலைமையில் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலையில் ,சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தவசி கலந்துகொண்டு, கட்சியினருடன் ஊர்வலமாக வந்து வைகை அணை சாலை சந்திப்பில் உள்ள கழக நிறுவன தலைவர், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனை தொடர்ந்து ஆண்டிபட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து ,அருகில் உள்ள எம்ஜிஆர் படிப்பகத்தில் கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ,ஒன்றிய ,நகர, கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment