பாசனத்திற்காக மஞ்சளார் அணையில் இருந்து 100 கன அடி வீதம் நீர் திறப்பு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 18 October 2024

பாசனத்திற்காக மஞ்சளார் அணையில் இருந்து 100 கன அடி வீதம் நீர் திறப்பு

 


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக மஞ்சளார் அணையில் இருந்து 100 கன அடி வீதம் நீர் திறப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மஞ்சளார் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


 இந்த நீர் திறப்பு நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள் பங்கேற்றனர்.


தமிழக அரசு உத்தரவின்படி மஞ்சளாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 100 கன அடி நீர் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுபட்டி, தும்ளப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதியில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெருகின்றன. 


இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடி நீரும், புதிய ஆயகட்டில் உள்ள 1,873 ஏக்கர் நிலத்திற்கு 40 கன அடி நீர் என மொத்தம் 100 கன அடி நீரை  150நாட்களுக்கு நீர் திறந்த விடப்பட்டுள்ளது. 


மேலும் அணையில் நீர் இருப்பை கொண்டு முறை பாசன முறையில் நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிப்பதோடு விவசாயிகள் நீரை வீணாக்காமல் பயன்படுத்தி மகசூலை பெருக்கிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad