ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 October 2024

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

 


ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.


 ஆண்டிபட்டி ,. அக் -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேற்கு ஓடைத் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


 அதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு விபூதி, மஞ்சள் ,குங்குமம் ,பால், தயிர், தேன், இளநீர் ,பழங்கள், சந்தனம் உள்பட 21 வகையான அபிஷேகமும், ஆராதனை பூஜைகளும் நடைபெற்றது .தொடர்ந்து தீப ஆராதனை காட்டப்பட்டது. நவகிரக தோஷங்களை நீக்கி, தடைகளை உடைத்து, சோதனைகளை சாதனையாக்கி, கலியுகத்தில் தீய சக்திகளை அழித்து, தர்மத்தை காத்து அருள் பாலிக்கும் வீரஆஞ்சநேயர் பகவானை பக்தர்கள் பய பக்தியுடன் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து செந்தூர்க்க அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .


விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு துளசி, செந்தூரம் ,லட்டு, , வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது .

No comments:

Post a Comment

Post Top Ad