பாப்பம்மாள்புரத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் விஜயதசமி திருவிழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பாப்பம்மாள்புரம் பகவதி அம்மன் கோவிலில் விஜயதசமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பகவதி அம்மன் உற்சவ மூர்த்திக்கு பல்வேறு அவதார அலங்காரங்கள் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜை நடந்து, மகிஷாசுர மர்த்தினி வதம் செய்யப்பட்டு, அம்மனுக்கு ஹோமத்துடன் பாலாபிஷேகம் செய்து விசேஷ பூஜை செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து சிறு குழந்தைகள் கல்வி பயிலும் தொடக்கமாக பச்சரிசியில் தமிழ் எழுத்தின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுத வைத்து அவர்களது கல்வி மென்மேலும் வளர வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை பகவதி அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஜெய்சங்கர் , பொருளாளர் ஜெகநாதன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment