வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தோழர்கள் பயிற்சி வகுப்பு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 October 2024

வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தோழர்கள் பயிற்சி வகுப்பு

 


வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை தோழர்கள் பயிற்சி வகுப்பு .


ஆண்டிபட்டி, அக். 22 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தேனி மாவட்ட முன்னோடி தென்னை விவசாயிகளுக்கு தென்னை தோழர்கள் என்ற தலைப்பில் உறைவிட பயிற்சி தொடங்கி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரின் நேர்முகத் துணை இயக்குனர் வளர்மதி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


   அவர் பேசும்போது தென்னையின் முக்கியத்துவத்தை விளக்கி கூறியதுடன், தேனி மாவட்டத்தில் தென்னையின் பொருளாதாரத்தையும், விற்பனை வாய்ப்பையும் எடுத்து கூறினார். மேலும் தென்னையில் மதிப்பு கூட்டுவதைப் பற்றியும் எடுத்துக் கூறி, தென்னை சார்ந்த பொருட்களின் கண்காட்சியை  தொடங்கி வைத்தார். 


 பின்னர் பேசிய வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் முனைவர் மதன் மோகன் அவர்கள் பேசும்போது, தென்னை ஒரு கற்பகத்தரு என்றும், தென்னையின் அனைத்து பொருட்களும் பயன்படுத்தக் கூடியவை என்றும், அதன் சாகுபடி முறையையும் எடுத்துக் கூறினார். முனைவர் சுதாகர் அவர்கள் தென்னையில் நடவு பற்றியும், உர நிர்வாகம் ,நீர் நிர்வாகம் பற்றி விளக்கினார் .


   பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் சதீஷ் பேசும்போது தென்னையில் உள்ள பல்வேறு ரகங்கள் பற்றியும் ,அவற்றின் சிறப்புகளையும் விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கெங்குவார் பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் தமிழன், தென்னை வாரிய உறுப்பினர் சுந்தரம் ,முன்னோடி விவசாயி ஆசை தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் சென்னை, தென்னை வளர்ச்சி வாரிய முன்னோடி பயிற்றுநர்கள் பரமேஸ்வரன், கனகசபாவதி ஆகியோர் தென்னை மரம் ஏரும் கருவியை கொண்டு, மரம் ஏறி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கீதாராணி, கவிதா மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad