ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குழந்தைகள் தின விழா.
நவ. 16 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். நிர்வாகி தமயந்தி அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் செயலாளர் மேத்யூஜோயல் மற்றும் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி ஆகியோர் மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழா பற்றிய கருத்துக்களையும், முதல்வர் அவர்கள் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பாடல்களையும் பாடி விழாவை சிறப்பித்தார்கள். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது . ஏற்பாடுகளை பூமா, கவிதா, பாண்டிச் செல்வி,ராகினி, திவ்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். மேலும் மாணவர்கள் அனைவரும் ரோஜா செடிகளை கொண்டு வந்து, பள்ளி வளாகத்தில் நட்டு ரோஜா தோட்டம் அமைத்தனர். விழாவை முன்னிட்டு குழந்தைகளின் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
No comments:
Post a Comment