ஆண்டிபட்டி ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் .
ஆண்டிபட்டி, நவ. 25 -தேனி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் 23ம் தேதி நேற்று கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் வேல்மணி பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் மற்றும் ஊராட்சி செயலர் பிச்சைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை தரம் உயர்த்தப்படும் ஆண்டிபட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தார். டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் அழகுமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் கார்த்திகேயன் என பலர் கலந்து கொண்டனர். திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் தலைவர் அக்ஷயா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஐந்தாண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசி கண்ணீர் மல்க கூட்டத்திலிருந்து ஊராட்சித் தலைவர் விடைபெற்றார். 2025 -26 ஆம் ஆண்டுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 1.10 கோடி மதிப்பிலான பணிகள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜதானி ஊராட்சியில் தலைவர் பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் ஜோதிபாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மரிக்குண்டு ஊராட்சியில் தலைவர் செல்லமணி மகாலிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. எஸ்.எஸ்.புரம் ஊராட்சியில் தலைவர் ரத்தினம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அனுப்பபட்டி ஊராட்சியில் தலைவர் சுப்புலட்சுமி தங்கையா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சித்தார்பட்டி ஊராட்சியில் தலைவர் சிவரங்கு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment