கோத்தலுாத்து ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் இரு புறமும் உள்ள முட்புதர்களை ஜேசிபி மூலம் அகற்றி சாலை விரிவாக்கம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கோத்தலுாத்து ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பையம்பட்டி முதல் பிச்சம்பட்டி வரையிலான சாலையில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து சாலையை மரித்ததால், பல விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோளின் படி கோத்தலுாத்து ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் இரு புறமும் உள்ள முட்புதர்களை ஜேசிபி மூலம் அகற்றி சாலை விரிவாக்கம் செய்தனர். இதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment