ஆண்டிபட்டியில் வாடகை கட்டாததால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான வீடு சீல் வைக்கப்பட்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது.
ஆண்டிபட்டி ,நவ.29 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடைவீதியில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் விவசாய நிலங்களும் ,ஆண்டிபட்டி ஒட்டிய பல இடங்களில் வீடுகள், கடைகள், உள்ளிட்டவைகளும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது .
இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழக முழுவதும் உள்ள கோவில்களுக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல நூறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் மற்றும் இடங்களுக்கு முறையான வாடகை வசூல் செய்ய வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரயில்வே பீடர் ரோட்டில், மேற்கு பகுதியில் உள்ள தனியார் ஒருவர் 50 லட்சம் மதிப்பிலான மூன்று இடம் சென்ட் இடம் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் கடந்த பல வருடங்களாக வாடகை செலுத்தாத காரணத்தினால், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், திண்டுக்கல் அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, தேனி உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில் , நேற்று அந்த வீட்டிற்கு சென்று சீல் வைத்து சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது செயல் அலுவலர் ஹரிஷ் குமார், அறநிலையத்துறை நில அளவை தாசில்தார் சுருளி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் காவல் துறையினர் , மின்சாரத்துறையினர் ,தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறைனர் ஆகியோரின் பாதுகாப்புடன் அந்த வீடு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாதீனம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment