ஆண்டிபட்டியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
ஆண்டிபட்டி ,நவ. 28 -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழிகாட்டுதலின்படி, ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். உடன் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ்,மாவட்ட கவுன்சிலர் ஜி.கே பாண்டியன்,பேரூர் செயலாளர் பூஞ்சோலை சரவணன்,ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன் ,மலைச்சாமி ,இளைஞர் அணி அர்ஜுன் மற்றும் மகளிர் அணி,ஒன்றிய ,பேரூர் , கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment