சூரசம்ஹார நிகழ்ச்சி
தேனி மாவட்டம், போடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையினர் சார்பில் புதியதாக கஜமுகா சூரன், சிங்கமுகா சூரன், பானு கோபாலன், சூரபத்மன் ஆகிய நான்கு தலைகளுடன், சூரபத்மனின் சிலைகொண்டாடப்பட்டது.
கோவில் பரம்பரை அறங்காவலரும், இளைய ஜமீன்தாருமான முத்துராஜன் தலைமையில் செயல் அலுவலர் சுந்தரி முன்னிலையிலும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகளை திருக்கோவில் தலைமை அர்ச்சகர் சோமாஸ் கந்த குருக்கள், விக்னேஸ்வரன் குருக்கள் ஆகியோர் செய்தனர். ஏற்பாடுகளை சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையின் குருநாதர் சுருளிவேல் தலைவர் ஜெயராம், முருகன், செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் செந்தில்குமார் துணை
செயலாளர்கள் நாகராஜ், மணிகண்டன், நிர்வாகஸ்தர்கள் மற்றும் மெய்யன்பர்கள் செய்திருந்தனர். அதனை தொடர்ந்து முருகன் தெய்வானை திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 3,03,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்
No comments:
Post a Comment