செல்வா மரக்கடை உரிமையாளர் ஆரோக்கியதாஸ்மீது வழக்குபதிவு-
தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை ரோடு ஜே.ஆர். ஆர் நகரில் குடியிருந்து வரும் மரியபிரான்சிஸ் மகன் ஆரோக்கிய தாஸ் இவர் அப்பகுதியில் செல்வா மரக்கடை - மற்றும் மர அறுவை மில் நடத்தி வருகிறார்
இவர் தென்கரை வைகை அணை சாலையில் உள்ள சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சரவணன் என்பவர் வாடகைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகளை செய்து கொண்டிருக்கும் பொழுது . அந்த இடத்திற்குள் மரிய பிரான்சிஸ் மகன் ஆரோக்கியதாஸ் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் அங்குஇருந்த சேதுராமன் என்பவரை ஆபாசமாக பேசி இரும்பு ராடால் அவரை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை காவல் நிலையத்தில் சேதுராமன் கொடுத்த புகார் மீது தென்கரை காவல்துறையினர் உரிய விசாரணை செய்து ஆபாசமாக பேசி இரும்புராடால் தாக்க முயற்சித்தும் மேலும் கொலை மிரட்டல் விடுத்த செல்வா மரக்கடை உரிமையாளர் ஆரோக்கியதாஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆரோக்கியதாசை கைது செய்ய தென்கரை காவல்துறையினர் உரியநடவடிக்கை எடுத்து வருகின்றனர்
No comments:
Post a Comment