ஆண்டிபட்டியில் அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு.
ஆண்டிபட்டி , டிச. 27 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
வைகை சாலை பிரிவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையில், ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், பேரூர் செயலாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலையில் ,எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அம்மா பேரவை குமார், மாணவரணி பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கணேசன், நிர்வாகி பாக்கியராஜ் உள்பட ஒன்றிய ,நகர ,கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment