ஆண்டிபட்டியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழா .
ஆண்டிபட்டி ,டிச. 26 -தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு பாதிரியார் மார்ட்டின் தலைமையில் பாடல் திருப்பலி பூஜையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது .அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இயேசுநாதர் பிறந்த குடில் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது .திருப்பலியில் சேவா மிஷனரி அருட் சகோதரிகள் மற்றும் பாடல் குழுவினரால் கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டது .தொடர்ந்து அனைவருக்கும் கிறிஸ்மஸ் கேக் வழங்கப்பட்டது. விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment