ஆண்டிபட்டியில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை.
ஆண்டிபட்டி ,டிச. 29 - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தேமுதிக வின் நிறுவனத் தலைவரும் ,முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை ஆண்டிபட்டியில் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி பகவதி அம்மன் கோவில், கொண்டமநாயக்கன்பட்டி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்தின் பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக பேரூர் கழக செயலாளர் பாலாஜி தலைமையில் ,தேனி மாவட்ட மகளிர் அணி முன்னாள் செயலாளர் சந்திரமதி முன்னிலையில் கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் .இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் தங்கவேல், கணேசன், சக்திவேல், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். குருபூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி நகரின் பல்வேறு இடங்களில் ஒன்றிய, பேரூர் கழகம் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment