ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கும்பாபிஷேகம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 December 2024

ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கும்பாபிஷேகம்.


ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கும்பாபிஷேகம்.


ஆண்டிபட்டி, டிச. 29 -  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் அமைந்துள்ள நன்மை தருவார்கள் திருத்தலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு  கும்பாபிஷேகம் நடந்தது.


 அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகமும் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது.


 விழாவில் யாகசாலை பூஜை நடந்து கடங்கல் புறப்பாடாகி,  அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள குதிரை மேல் இருக்கும் அய்யனார் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் ,ஸ்ரீ குபேர வராகியம்மன் ,ஸ்ரீ கௌமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது.


 விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் லோகி ராஜன் வரதராஜன், பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன், நிர்வாகி பொன் முருகன் , பேரூர் கவுன்சிலர் பாலமுருகன், மாணவரணி முருகேசன், திமுக கர்நாடக மாநில தலைவர் பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி அறங்காவலர் டாக்டர்.எஸ்.பி.எம் செல்வம் ,மனோஜ் குமார், பசுமை ஆடை பக்தர்கள், நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்து வன்னியம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad