ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா .வடைமாலை சாத்தி வழிபாடு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 December 2024

ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா .வடைமாலை சாத்தி வழிபாடு


ஆண்டிபட்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா .வடைமாலை சாத்தி வழிபாடு.


ஆண்டிபட்டி, டிச.31 -அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டிபட்டி  நகரின் மையப் பகுதியில்  அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு  வடைமாலை சூட்டி  அபிஷேக ஆராதனை  நடைபெற்றது.


 தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில்  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  வீர ஆஞ்சநேயருக்கு பால்,பழம்,பன்னீர், தேன்,சந்தனம்,குங்குமம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.


அதனைதொடர்ந்து ராஜ அலங்காரத்தில்  காட்சியளித்த வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சூட்டி , சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு  மகாதீபாராதனை காட்டப்பட்டது.


 இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள்  கலந்து கொண்டு ராஜ  அலங்காரத்தில் காட்சி அளித்த வீர ஆஞ்சநேயரை சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி செந்தூரம்,லட்டு,கேசரி, வடை புளியோதரை ,பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad