ஆண்டிபட்டியில் அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 December 2024

ஆண்டிபட்டியில் அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

 


ஆண்டிபட்டியில் அம்பேத்கர் குறித்து தவறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.


ஆண்டிபட்டி, டிச. 20-தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தவறாக பேசியதை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



குமுளி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வைகைசாலை பிரிவிலிருந்து கொடிகளை பிடித்துகொண்டு ஊர்வலமாக வந்தவர்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவை கண்டித்தும், அம்பேத்கரின் புகழ் குறித்தும் கோஷம் எழுப்பிய அவர்கள்  அம்பேத்கரை தவறாக பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் .


ஆர்ப்பாட்டத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் கழகச் செயலாளர் பூஞ்சோலை சரவணன், நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ராமசாமி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சுரி செல்வம் ,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மேற்கு ஒன்றிய அமைப்பாளர் மலைச்சாமி, இளைஞர் அணி அர்ஜுன், சிவா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் அதிபன் ராஜ், பேரூராட்சி கவுன்சிலர் முத்துராமன் (விசிக), காமாட்சி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad