நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் டாக்டர்அம்பேத்கர் அவர்களை விமர்சித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய நாடெங்கும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி விமர்சித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது . இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ் .சரவணகுமார் அவர்களுடைய தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட திமுகநிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டார்கள்
அதேபோல் பெரியகுளத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் . பெரியகுளம் நகரச் செயலாளர் கே. முகமது இலியாஸ் . நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார். ஆகியோர் தண்ணீர் ஊற்றி கழுவி. அண்ணல் அம்பேத்கர் அவர்களை விமர்சித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அருணாச்சலம் நாகஜோதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ப.கார்த்திக் பெரியகுளம் நகர துணைச் செயலாளர் மு .சேதுராமன் நகர பொருளாளர் சுந்தரபாண்டியன் . மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் . நகர் மன்ற உறுப்பினர்கள் . வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment