இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அந்த மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென்று பழுதானது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மின்வாரிய பணியாளர்கள் சென்று மின்இணைப்பை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால், மின்சார டிரான்ஸ்பார்மர் முழுமையாக செயல் இழந்து விட்டதால் மின் இணைப்பு வழங்க முடியவில்லை.
பின்னர் மின்சார டிரான்ஸ்பார்மரை மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை வரை இந்த பணிகள் நடந்தன. இதனால், நேற்று மாலை வரை அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்படவில்லை. மாலை 6 மணியளவில் பணிகள் முடிந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 18 மணி நேரத்துக்கு பிறகு மின்சாரம் வந்ததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதுவரை மக்கள் வீடுகளில் சமையலுக்கு மசாலா அரைக்க முடியாமலும், வாட்டி வதைத்த வெயிலால் மின்விசிறியை இயக்க முடியாமலும் பரிதவித்தனர்.
No comments:
Post a Comment