திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் அமைந்துள்ள வடநூம்பல் பகுதியில் ஐயமிட்டுஉண் என்ற இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை திருவேற்காடு ரெசிடென்ஸ் ஹவுஸ் அப்பார்ட்மெண்ட் மற்றும் ரிபப்ளிக் பவுண்டேசன் இணைந்து ஏழை எளியோருக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கபட்டது.
இத்திட்டத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவை பகிர்ந்து கொள்வதும், பெறுவதும் என்ற அடிப்படையில் உயர்ந்த உன்னதமான நோக்கமாக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது, ஏழை எளியோருக்கு தேவையான உணவுப் பொருட்கள் குடிநீர், குளிர்பானங்கள், மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட் சாக்லெட் பழவகைகள் ஆகியவற்றை இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் என்.இ.கே முர்த்தி கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார், இதில் திருவேற்காடு ரெசிடென்ஸ் ஆப் பிரிக் ஹவுஸ் அபார்ட்மென்ட் நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment