தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் சோத்துப்பாறை அணைப் பேருந்து நிறுத்தத்திலிருந்து மலைக் கிராமங்கள் ஆன போடி தாலுகா அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கன்னக்கரை சின்னூர் பெரியூர் கடப்பாரை குழி மூங்கிலனை ஊரடி ஊத்துக்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் சோத்துப்பாறை அணை பேருந்து நிறுத்தத்தை மையமாகக் கொண்டு பெரியகுளம் தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மலைக்கிராம மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து சோத்துப்பாறை அணை பேருந்து நிறுத்தத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தலைச்சுமையாக குதிரை மார்க்கமாகவும் ஜிப் போன்ற வாகனங்கள் மூலமும் எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் மலை கிராமத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்கு விளைவிக்கக் கூடிய ஏலம் காப்பி எலுமிச்சை ஆரஞ்சு வாழை உள்ளிட்ட உள்ளிட்ட விளைவித்த பொருட்களை தலைச் சுமையாகும் குதிரை மார்க்கமாகவும் எடுத்து வந்து இந்த சோத்துப்பாறை அணை பேருந்து நிறுத்தத்தில் ஒன்றுசேர்த்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் பெரியகுளம் தேனி மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர் இந்நிலையில் விவசாயிகள் மற்றும் மலைக் கிராம மக்கள் சோத்துப்பாறை அணை பேருந்து நிறுத்தத்திற்கு வந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது சோத்துப்பாறை அணை பேருந்து நிறுத்தத்தில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில் தான் மலைக்கிராம மக்கள் தங்கள் கொண்டு வருகின்ற பொருள்களை பாதுகாத்து இளைப்பாறி வந்தனர்.
யாரும் ஆதரவு தராத நிலையில் மலைக்கிராம மக்களுக்கு மழையிலும் வெயிலிலும் பெரும் ஆதரவை தந்து இளைப்பாறும் இடமாக இருந்த நிழற்குடை தற்போது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள நிழற்குடை சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது இந்நிலையில் அப்பகுதி மக்கள் பலமுறை புதிய நிழற்குடை அமைத்து தர கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் அமைத்து தராமல் இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தாமல் மெத்தனம் காட்டி இருந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment