தேனி அணனஞ்சியில் நடைபெறும் விழாவில் சுமார் 249 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்க உள்ளார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

தேனி அணனஞ்சியில் நடைபெறும் விழாவில் சுமார் 249 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்க உள்ளார்.

தேனி அணனஞ்சியில் நடைபெறும் விழாவில் சுமார் 249 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்க உள்ளார், தேனி மாவட்டத்தில் 10417 பயனாளிகளுக்கு 71.4கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 74.21 கோடி மதிப்பிலான 102 புதிய திட்ட பணிக்கான அடிக்கள் நாட்டுதல் மற்றும் 114.21 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.


தேனி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குதல் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் புதிய திடடபணிக்கான அடிக்கல் நாட்டுதல் விழாவில் தேனி அன்னஞ்சியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்  ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  கலந்து கொள்ள இருப்பதால்  விழா மேடையில் மற்றும் முதலமைச்சர் பயணம் செய்யும் பகுதியில்  மூவாயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழா மேடையில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன, காலை பத்து முப்பது மணி அளவில் தொடங்க உள்ள இந்த விழாவிற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை  தந்தனர்.


விழா மேடை அமைக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் சிறப்புக் காவல் படையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர். உலவுத்துறையினர் தீயணைப்புத் துறையினர் மருத்துவத் துறையினர்  தீவிர கண்காணிப்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருகினார்.

No comments:

Post a Comment

Post Top Ad