இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் நடன நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தங்களது துறை சார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர் இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது என்றும் இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தங்களை மீண்டும் மாணவ பருவதற்கு அழைத்துச் சென்றது போல் உணர்வதாகவும், தாங்கள் பழைய மாணவர்களாக இருந்து தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்து இருந்தாலும், அதற்கான விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இந்த கல்லூரி எங்களுக்கு அளித்தது என்று பெருமிதமாக கூறியதோடு இதுபோன்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இக்கல்லூரியில் தொடர்ந்து நடைபெற வேண்டும் அவ்வாறு நடைபெறுகின்ற அனைத்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பிலும் தாங்கள் கலந்து கொள்ள விரும்புவதாகவும், அதுபோல தற்போது வெள்ளி விழா கொண்டாடுவது போல் பொன் விழா பவள விழா நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் இக்கல்லூரியில் நடை பெற விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
தேனி அருகே வடபுதுபட்டி தனியார் கல்லூரியின் முதல் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, அக்கல்லூரியில் வெள்ளிவிழா நுழைவாயில் மற்றும் கிங் மேக்கர் காமராஜர் சில்வர் ஜுபிலி பிளாக் ஆகியவை திறக்கப்பட்டது இதனை தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
No comments:
Post a Comment