தேனி மாவட்டத்தில் இதுவரை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.2,58,14,500 மதிப்பில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 April 2022

தேனி மாவட்டத்தில் இதுவரை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.2,58,14,500 மதிப்பில் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தேனி மாவட்டத்தில் 2016-17 முதல் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020 முதல் குறுவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதுவரை பயனடைந்த பயனாளிகள் 2515, அவர்களுக்கு கிடைக்கபெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ.2,58,14,500 (இரண்டு கோடியே ஐம்பத்து எட்டு லட்சத்து பதினான்கு ஆயிரத்து ஐநூறு). ஆகும்.


விவசாய பெருமக்கள். பயிர் காப்பீடு செய்வதற்கு பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் கார்டு நகல், சிட்டா அடங்கல், வாங்கி புத்தக  முன்பக்க நகல், ஆகிய மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பயிர்களை பயிர் காப்பீடு செய்து பயன் அடைந்து கொள்ளலாம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும் விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை இயக்குனர்  அலுவலர்களை அணுகலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad