வாலிபர் சாவில் மர்மம்; சுடுகாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் உடற்கூறு ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

வாலிபர் சாவில் மர்மம்; சுடுகாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் உடற்கூறு ஆய்வு.

தேனி சாவில் மர்மம் மர்மம் என வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இன்று வெங்கடாசலபுரம் சுடுகாட்டில் அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.


தேனி மாவட்டம் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சவலலபட்டி கிராமத்தில் கூலிதொழிலாளியாக வசித்து வருபவர் தங்கவேல்.இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரின் இரணடாவது மகன் கன்னிச்சாமி வயது 25 இவர் தேனியில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக வேலையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியவர் காலை வெகுநேரமாகியும் எழாததால் சந்தேகமடைந்த கன்னிச்சாமியின் தந்தை எழுப்பியுள்ளார் .எந்தவித அசைவும் இல்லாததால் உடனடியாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில் நிலையில் அடுத்தகட்டமாக இறுதிகட்ட மரியாதை செய்து அடக்கம் செய்தனர்.ஆனால் கன்னிசாமியின் அண்ணன் தங்கவேல் சாவில் மர்மம் என்று கூறி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிபடையில் இன்று அவரது உடலை மீண்டும் தோண்டி உடற்கூறு ஆய்விற்கு உட்பட்டனர்.


இதில் தேனி தாசில்தார் சரவணபாபு,வீரபாண்டி சார்பதிவாளர் வரதராஜன்,பிசிபட்டி காவல் ஆய்வாளர் முருகன்,தேனி மருத்துவகல்லூரி பிணக்கூறு மருத்துவர்கள் கோகுல பாண்டி சங்கர் மற்றும் கணபதி,வெங்கடாசலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கனகராஜ் வெங்கடாசலபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி மற்றும் கன்னிசாமியின் அப்பா மற்றும் அண்ணன் அக்கா மற்றும் உறவினர்கள் முனனிலையில் உடற்கூறு ஆயவு செய்யபட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad