தேனி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளை தேனி மாவட்ட விளையாட்டு திடலில் ஆட்சியர் துவக்கி வைத்தார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

தேனி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள மற்றும் விளையாட்டு போட்டிகளை தேனி மாவட்ட விளையாட்டு திடலில் ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில்  2021-22 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அவர்கள் தலைமையேற்று இன்று காலை போட்டிகளை துவக்கி வைத்தார்.


இதில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு இறகுப்பந்து போட்டிகள், பார்வையற்றோர்க்கு வாலிபால் போட்டிகள், மனநலம் பாதிக்கப் பட்டவருக்கு ஏறி பந்து போட்டிகள், காதுகேளாதோருக்கு கபடி போட்டி உள்ளிட்ட குழு போட்டிகளும் 50 மீட்டர் ஓட்டம் 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற உள்ளது.


முதல் போட்டியாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை தேனி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார், முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad