தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளி ஒரு பெண் உட்பட3 பேருக்கு ஆயுள் தண்டனையும் . 5. ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்புவழங்கினார், கடந்த 2016 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருநாக்கமுத்தன் பட்டியில் முல்லைப் பெரியாறு ஆற்றில் குளிக்கச் சென்றபோது அஜித்குமாருக்கும் செல்லப்பாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் ஏற்பட்டு செல்லப்பாண்டியன் அவரது தாய் முத்து பிள்ளையும் அஜித்குமார் வசிக்கும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அஜித் குமாரின் தந்தை கண்ணன், தாய் ராமுத்தாய் இருவரும் முத்துபிள்ளையை தாக்கியுள்ளனர்.
தனது தாயார் தாக்கப்படுவதை தட்டிக்கேட்ட செல்லப்பாண்டியனை மேற்படி நபர்களான அஜித்குமார் கண்ணன், ராமுத்தாய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி தாக்கியதில் சம்பவ இடத்தில் செல்லப்பாண்டி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கொலைக் குற்றம் புரிந்த அஜித்குமார் 27. வயது கண்ணன் 46 வயது, ராமுதாய் 42 வயது ஆகியோர் மீது கூடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று இறுதி விசாரணையின் முடிவில் 3 பேரும் குற்றவாளி என தீர்மானித்து மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்தும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி சாந்தி செழியன் தீர்ப்பு வழங்கினார் தீர்ப்பை அடுத்து பலத்த பாதுகாப்புடன் காவலர்கள் மதுரை மத்திய சிறைக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment