கால்நடை பராமரிப்பு துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் கடந்த 25ஆம் தேதி முதல்இருபத்தி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தேனி மாவட்டம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில் இன்று எந்த ஒரு அறிவிப்பும் இன்றி நேர்காணல் ஒத்திவைப்பதாக கால்நடை பராமரிப்பு அலுவலர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேர்காணலில் பங்கு கொள்ள வந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முன்னறிவிப்பு ஏதுமின்றி நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நேர்காணலில் கலந்து கொண்டு வந்தவர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயற்சித்தனர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு துணை கண்காணிப்பாளர் பால்சுதர் விரைந்து வந்துபேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
இதனால் தேனி பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம்போக்குவரத்து தடைபட்டது.
No comments:
Post a Comment