நூறாண்டுகளை கடந்த பெரியகுளம் பேருந்து நிலையம் தற்போது சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்படுகிறது, சமூக ஆர்வலர்கள் கூறும்போது நூற்றாண்டுகள் கடந்த நகரம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதா அல்லது நூறாண்டுகள் கடந்தும் கூட இன்றைய நிலைமையை நினைத்து வருத்தப்படுவதா தெரியவில்லை பெரியகுளம் பேருந்து நிலையத்தின் நிலையை காட்டிக்கொடுத்துவிடும் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்ட இரும்பு சேர்கள் பல காணாமல் போய்விட்டது, சில செயல்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இரவு நேரத்தில் திருடர்கள் யாராவது வந்து சேர்களை களவாடிச் சென்று விடுகிறார்கள் என்னவோ தெரியவில்லை, ஆண்டிபட்டி போன்ற ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிற்கும் இந்த பஸ் ஸ்டாப்பில் ஒரு சில நேரங்களில் கஞ்சா உட்பட சில போதைப் பொருட்களுக்கு அடிமையான சில இளைஞர்கள் குறிப்பிட்ட நேரங்களில் ஒன்றாக கூடி போதையில் மிதக்கின்றனர், சில நேரங்களில் பயணிகளை அச்சுறுத்தவும் செய்கிறார்கள்.
இவர்களுக்கு பயந்துகொண்டு பெண்களும், பள்ளி, கல்லூரி மாணவிகளும் இந்த பயணிகள் நிழற்குடையில் காத்திருக்க அச்சமடைந்துள்ளனர் எனவே பெரியகுளம் பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, ஓய்வு இருக்கைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment