ஆண்டிபட்டி பேரூராட்சியில் 41 லட்சத்தில் வளர்ச்சி பணிகள். பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

ஆண்டிபட்டி பேரூராட்சியில் 41 லட்சத்தில் வளர்ச்சி பணிகள். பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்.

ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் வரவு, செலவினங்கள்  குறித்து வாசித்தார். 


கூட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்  சட்டமன்ற உறுப்பினர்  நிதியிலிருந்து அன்னை சத்யா நகர் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மன்றத்தின் வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது .


மேலும் 18-வது வார்டு என்ஜிஓ காலனி, 14வது வார்டு சந்தப்பேட்டை ,10 ஆம் வார்டு சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் 3 மேல்நிலை தொட்டிகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ள 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .நமக்கு நாமே திட்டத்தின் கீழ்15வது வார்டு தென்றல் நகர் /அண்ணாநகர் வடிகால் திட்டத்திற்காக 9. 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,6வது வார்டு நேதாஜி நகர், 15வது வார்டு நாடார் தெரு , 10வது வார்டு சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 3 அங்கன்வாடி மையங்களுக்கு மராமத்துப் பணி மேற்கொள்ள தலா 2 லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad