தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் , மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை, தேனி பசுமை படை மற்றும் கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் .அப்போது மாணவ-மாணவிகளிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்துடன் ஆண்டிபட்டி சந்தைப்பேட்டை பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. லா தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது, மேலும் வணிகர்கள் மற்றும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேர்மன் சந்திரகலா, செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், தேனி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள் ரங்கராஜ் ,புனிதா ,சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்பட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் சந்தை வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் முக கவசம் அனைவரும் அணிய வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment