அம்மாச்சியாபுரம் மரிக்குண்டு சாலையில் அலகு நகர் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தென்னை மரங்கள் திடீரென சூறாவளி காற்றினால் சாய்ந்தது .மேலும் அருகில் இருந்த மின்சார வயரின் மீது இரண்டு தென்னை மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பம் ஒன்று வேரோடு சாய்ந்தது மற்றொன்று சாய்ந்த நிலையில் இருந்தன. இந்த தகவல் அறிந்த ஊராட்சிமன்ற தலைவர் பஞ்சமணி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத் துறையினருக்கு தகவல் கூறினார்.
மின்சார துறையினர் மற்றும் ஊர் கிராமத்தினர் துணையுடனும் ஜேசிபி உதவியுடன் தென்னை மரங்களை அப்புறப்படுத்தினார் மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் கம்பம் அருகில் இருக்கும் லட்சுமி என்பவரின் வீட்டு பகுதியில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது மாட்டின் உரிமையாளர் உடனடியாக பசு மாடுகளை அவிழ்த்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு அப்புறப்படுத்தினார் இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment