தேனி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நலனுக்காக வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சங்கிலி தலைமை வகிக்க பொதுச் செயலாளர் முருகன் தொழிலதிபரும் திமுக பிரமுகருமான மகேந்திரன் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராம் ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர் பழம் உள்ளிட்டவைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் சருத்துப்பட்டி பிரபு சிறப்பாக செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி யில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி நகர அமைப்பாளர் சிவராம் நகரத்தலைவர் செல்லப்பாண்டி மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மற்றும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment