தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா புலிகுத்தி காந்தி நகர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜீவா தலைமையில் தேனி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், எங்கள் தெருவின் பாதை 10 அடி அகலத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தெரு சேதமடைந்துள்ளது.
மேலும் இந்த தெரு வழியாக 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு தெருவில் உள்ள வீடுகள் முன்பு பொது பாதை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே தற்போது இந்த தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அளவீடு செய்யாமல் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.
அதனால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர்.
No comments:
Post a Comment