அதில் வீரபாண்டி பேரூர் கழக 2 வது வார்டு செயலாளர் வேங்கையன் இவர் நடைபெறறு உள்ளாட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் அதற்கு கட்சி மாவட்ட நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என கூறியதை தொடர்ந்து தமிழன் என்பவர் வீரபாண்டி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். தமிழன் தோல்விக்கு வேங்கையன் மறைமுகமாக வேலை செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழன் வேங்கயைன் ஆகியோருக்கு இடையே உட்கட்சி பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இருவரும் வீரபாண்டி பேரூர் கழக நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் செலுத்தும் இடத்தில் அவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிப் போய் கைகலப்பாக மாறியது, இதையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment