தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேண்டுமென்றே காவல்துறையினர் PCR வழக்கு என்று கூறி பொய் வழக்கு போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இனிவரும் காலங்களில் உரிய விசாரணை நடத்திய பின்பு இதுபோன்ற PCR வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இவர்களது மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment