தேனி அருகே வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்தக் கோவிலில் சித்திரை மாதம் திருவிழாவை முன்னிட்டு எட்டு நாட்கள் நடைபெறும் அதற்கு முன்னதாக கம்பம் நடும் விழா நடைபெற்றது கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் பூஜை செய்யப்பட்டு அங்கிருந்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் கம்பம் நடப்பட்டது இதனையடுத்து நடப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேப்பிலை மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் தலைமையில் தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பால் சுதர், பூர்வீக தலைக்கட்டார் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment