கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 April 2022

கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவிப்பு.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக கும்பக்கரை  வெள்ளப்பெருக்கு. அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து  வனத்துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக பெய்த  கனமழையால் நேற்று காலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜன் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிப்பதாக அறிவித்தார். 

மேலும் அருவிக்கு வரும் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

-பால்கிங்ஸ்லி, பெரியக்குளம் செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad