முத்தாய்பாய் காப்பு கட்டி, விரதமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து பயபக்தியுடன் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.இதில் பக்தர்கள் இரட்டை தீச்சட்டியுடனும், குழந்தைகளை சுமந்தும், அம்மன் வேடமணிந்தும் பூக் குழி இறங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்க கும் நிகழ்ச்சி நடந்தது, நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபட்டனர். இதனையடுத்து பெண்கள் முளைப்பாரி எடுத்தும், பொங்கல் வைத்தும் அம்மனுக்கு படைத்தனர். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
No comments:
Post a Comment