திருவிழாவின் முக்கிய அம்சமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்பில் வலப்புறம் ஊசிநூலால் தைத்து இடதுபுறம் மீண்டும் ஊசியால் தைத்து முடிச்சுப்போட்டு அதோடு ஊர்வலமாய் கிராமத்தை வலம் வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் . மேலும் ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் 48 நாட்கள் ஒரு மண்டலகாலம் விரதம் இருந்து தங்களது நாக்கில் அலகுகளை குத்தி கைகளில் தீச்சட்டி ஏந்தி ஆடியவாறு வந்து அம்மனை வழிபட்டனர்.
ஊர்வலத்திற்கு முன்னதாக ஒரே மாதிரியான சீருடை அணிந்த சிறுவர்கள் துடிப்புடன் சிலம்பம் சுற்றிச் சென்றதும், இரண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட தீப்பந்த சக்கரங்களுடன் தீப்பிழம்பாய் இளைஞர்கள் சுற்றிச் சுழன்று வந்ததும் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பெண்கள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களில் பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் தானிய வகைகளை முளைக்கவைத்து முளப்பாரி போட்டு வளர்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் .
ஊர்வலம் முடிந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்பட்டது . ஏற்கனவே கொரோனோ தடையால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த திருவிழாவில் இந்தாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment