தேனி அருகே வீரபாண்டி கோவில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர கோரி இந்து முன்னணி தேனி நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இவர்கள் அளித்த மனுவில் திருவிழா நடைபெறும் நாட்களில் வீரபாண்டி இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கோயில்பிரகாரத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்றும் ஆற்றங்கரையில் சுகாதார வசதிகளை மேம்படுத்தவும் கோவிலுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை விழா நடைபெறும் நாட்களில் மூட வேண்டும் என அந்த மனுவில் இருந்தது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் திலகராஜ் நகர செயலாளர்கள் பாலா பிரவீன் செல்வம் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment