ஆய்வின் போது, தென்கரை பேரூராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமையலறை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், அலுவலகப் பணியாளர்களின் வருகை பதிவேடு, தன்பதிவேடு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியன தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கான பதிவேடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அரசின் பயன்கள் விரைந்து கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஏ 485 பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில், விற்பனை முனைய இயந்திரத்தில், இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாற்றிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா.முத்துகுமார், உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) ராஜாராம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சி.சுமிதா, தென்கரை பேரூராட்சித்தலைவர் வே.நாகராஜ், வட்டாட்சியர் ராணி, நகராட்சி ஆணையாளர் புனிதன், பேரூராட்சி செயல் அலுவலர் முகம்மது இப்ராஹீம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமார் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment