சரியாக பணிக்குவராத கணித ஆசிரியரை மாற்றக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

சரியாக பணிக்குவராத கணித ஆசிரியரை மாற்றக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு.

ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைக்கிராமமான வாலிப்பாறையில்  சரியாக பணிக்குவராத கணித ஆசிரியரை மாற்றக்கோரி  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்  மறுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மலைக்கிராமம் வாலிப்பாறை இங்கு கடந்த 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ஆரம்பப்பள்ளி கடந்த 2002ஆம் ஆண்டு அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.


இப்பள்ளியில் 86 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் உள்ளனர், இப்பள்ளியில்  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கணித ஆசிரியர் ராமராஜ்பாண்டியன் என்பவர் சரியாக பள்ளிக்கே வருவதில்லை என்றும் மாதத்தில்  சில நாட்கள் மட்டுமே  பள்ளிக்குவரும் இவர் முறையாகப் பாடம் நடத்தவில்லை என்றும் பெற்றோர்  தரப்பில்  புகார் கூறப்படுகிறது, இது குறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர்  அனுப்பவில்லை, இதனால் இன்று  ஆசியர்கள் மட்டுமே பள்ளியில்  அமர்ந்து உள்ளனர்,  மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் பள்ளியும் நடைபெறவில்லை.


மேலும் கணித ஆசிரியரை மாற்றி வேறு புதிய ஆசிரியரை  நியமிக்கும்வரை  பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ள பெற்றோர்கள் மலைக்கிராமங்களில் உள்ள தங்களது தோட்ட பணிகளுக்காக தங்களது பிள்ளைகளையும் அழைத்து சென்றுவிட்டனர்.  இதனால் வாலிப்பாறை  கிராமமே ஆள் நடமாட்டமின்றி  வெறிச்சோடி காணப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad