தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனை புதூர் கிராமத்தில் இன்று தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்கள் தலைமையில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திம்மநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- பெரியகுளம் செய்தியாளர் அ. பால்ஸ்டார்கிங்ஸ்லி
No comments:
Post a Comment