சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம், உலக தமிழர் ஒன்றியம், தண்டாயுதபாணி தலைமையிலான ஆண்டிபட்டி ஆரிய வைசிய மகாசபை ஒருங்கிணைப்பில் திருக்குறள் திருவிழா கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆண்டிபட்டி ஆரிய வைசிய மஹாலில் நடைபெற்றது .
இந்த விழாவிற்கு ஸ்ரீலதா தயாளன் தலைமை தாங்கினார் .நிர்வாகிகள் சுகன்யா, ஜலஜா, சரஸ்வதி, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 1330 திருக்குறளை தெளிவுரை வழங்கி, ஏராளமானவர்களை திருக்குறள் வாசிக்க வைத்த நீலகண்ட தமிழன் சிறப்புரையாற்றி, திருக்குறள் தொண்டர் விருது வழங்கினார்.
விழாவில் தேனி மாவட்டம் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கவிஞர்கள் கவிதை வாசித்து , தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .மேலும் திருக்குறள் தொண்டாற்றி வரும் ஆண்டிபட்டி ,தேனி ,கம்பம் ,பெரியகுளம் பகுதியை சேர்ந்த பெண்களை போற்றும் வகையில் திருக்குறள் தொண்டர் விருது வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment