பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ்வடகரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொறியாளர் எஸ்.கே.தீபா (இளமின்பொறியாளர் - 1 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்), மற்றும் பெரியகுளம் வனச்சரக அலுவலர் விவேக் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து பேசினர். பொதுமக்கள் தங்களது அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமான கோரிக்கைகளை ஊராட்சிமன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் அவர்களிடம் அளித்தனர்.
- பெரியகுளம் செய்தியாளர் அ. பால்ஸ்டார்கிங்ஸ்லி
No comments:
Post a Comment