தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை விளக்கு பகுதியிலுள்ள தனியார் மில் வளாகத்தில் தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தேனி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் தலைமையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு தீ விபத்து மற்றும் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுதனியார் மில்லில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு தீ விபத்து மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் விபத்தில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்று தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார் இதனைத் தொடர்ந்து மில் தொழிலாளர்களுக்கு தீ விபத்து மற்றும் தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் பொன்னம்பலம் உதவி நிலைய அலுவலர் கணபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள், மில் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment